ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட்டம் !

கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (13) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பாதுகாப்பினை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த சேவை வேண்டாம் என தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் தனித்துவத்தை சிதைக்காதே, போக்குவரத்து அமைச்சு தனியாருக்காகவா என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நேர காலதாமதம் என குறிப்பிட்டு அம்பாறை கல்முனை ஒருங்கிணைந்த சேவையில் ஈடுபடும் இ.போ.ச ஊழியர்களுக்கும் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டு கைகலப்பில் முடிவடைந்திருந்து. இதன்போது இரு தரப்பினரைச் சேர்ந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

இந்நிலையில் கல்முனை தலைமையக பொலிஸாரினால் இ.போ.சபை ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும், இப்போராட்டத்தினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் போதிய பஸ்கள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர். இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பஸ்களும் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு கல்முனை தலைமையக பொலிஸார் சென்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.

, கல்முனையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போராட்டம் !

Back to top button