கிளிநொச்சி பகுதியில் வங்கியொன்றின் பெண் ஊழியரும் அவரது கணவரும் இணைந்து முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை பெற்று மோசடி செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் பொலிஸில் முறைப்பாடு sர்ய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரியும் வங்கியின் பெண் உத்தியோகத்தரும் அவரது கணவனும் இணைந்து முதியவர் ஒருவரிடம் மூன்று இலட்சத்து ஐம்பாயிரம் மற்றும் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவென ஆறு இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளனர்.
அத்துடன் பணத்திற்கு பதிலாக மறுக்கப்பட்ட காசோலையினையும் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட முதியவர் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி வங்கி பெண் ஊழியர் கணவருடன் சேர்ந்து செய்த மோசமான செயல்! | Kilinochchi Couple Fraud
பாதிக்கப்பட்ட முதியவரால் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் இருவருக்கும் எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அதோடு முதியவரை ஏமாற்றிய இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளனர்.