Tuesday, July 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsபாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி மீட்பு!

பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி மீட்பு!

14 வயதான சிறுமியொருவரை புத்தல பகுதியில் கடத்திச் செல்லப்பட்டு நிலக்கீழ் பாதாள அறையொன்றில் மறைத்து வைத்திருந்த நிலையில், அந்த சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சிறுமியை 12 ஆம் திகதி புதன்கிழமை மதியம் மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி புத்தல – கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றிற்கு கடந்த 9ம் திகதி வருகைத் தந்த மூன்று இளைஞர்கள், சிறுமியின் தந்தை மீது தாக்குதல் நடாத்தி, சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

சிறுமியை காதலிப்பதாக கூறும் 20 வயதான இளைஞனினாலேயே இந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடாத்திய விசாரணைகளில், பிரதான சந்தேகநபருடன் வருகைத்தந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸார் சந்தேகநபர்களிடம் நடாத்திய விசாரணைகளில், சிறுமி மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் இடம் தொடர்பான தகவல்களை அறிய முடிந்துள்ளது.

புத்தல பகுதியிலுள்ள பிரதான சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் வீட்டில் நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த ஒரு பாதாள அறையிலேயே சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார், சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியை மறைத்து வைக்கும் நோக்கில், ஒரு மாதத்திற்கு முன்பே இந்த அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

ஐந்து அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்ட இந்த அறையில், காற்றோட்டத்திற்காக இரண்டு தூளைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு நிலக்கீழ் பாதாள அறையிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில்கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்னர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

, பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி மீட்பு!

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்