ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

தமிழரசுக் கட்சியினரை சந்தித்த சஜித், அநுரகுமார !

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் நேற்றும் இன்றும் இலங்கை தமிழரசுக் கட்சியினரை சந்தித்தனர்.

இதன்போது இவர்கள் இருவரும் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தங்களின் நிலைப்பாட்டினை தௌிவுபடுத்தினர்.

13+ மற்றும் 13- அன்றி 13 ஐ நடைமுறைப்படுத்தும் முறைமையினை சிறப்பாக முன்னெடுப்பது குறித்த திட்ட வரைபினை மேற்கொள்ளவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாகாண சபையினை தாம் ஏற்றுக்கொள்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச , பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன , ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோர் நேற்று (10) சென்றிருந்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A. சுமந்திரன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சந்தித்துள்ளார்.

, தமிழரசுக் கட்சியினரை சந்தித்த சஜித், அநுரகுமார !

Back to top button