ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி !

அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று கல்வி கற்கும் 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் காலை உணவுக்காக நெத்தலி கருவாடு, வெண்டைக்காய் மற்றும் முருங்கைக் கீரை உள்ளிட்ட உணவு வகைகளை உட்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வுணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் இதனையடுத்து அனைத்து மாணவர்களையும் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

, 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதி !

Back to top button