Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Top Newsயாழில் தாயும் மகளும் பொது இடத்தில் செய்த அசிங்கம்: இளைஞர்கள் அதிர்ச்சி.!!

யாழில் தாயும் மகளும் பொது இடத்தில் செய்த அசிங்கம்: இளைஞர்கள் அதிர்ச்சி.!!


யாழில் தாயும் மகளும் பொது இடத்தில் செய்த அசிங்கம்: இளைஞர்கள் அதிர்ச்சி.!! யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் மதுபோதையில் நடு வீதியில் விழுந்து கிடந்த தாயும், மகளும் மீட்கப்பட்டுள்ள சம்பம் குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள பௌத்த விகாரைக்கு அண்மையில் உள்ள இராணுவ முகாமுக்கு எதிராக இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பிலான காணொளியும் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உதவ சென்ற இளைஞர்கள் அதிர்ச்சி

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 53 வயது தாயும், 29 வயது மகளுமே மதுபோதையில் விழுந்துள்ளனர்.

நேற்று இரவு 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் இரண்டு பெண்கள் வீதியில் விழுந்து கிடந்ததை அவதானித்த பிரதேச இளைஞர்கள், அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து, உதவிக்கு விரைந்து சென்று, அவர்களிற்கு என்ன நடந்தது என விசாரித்த போதே, மது வாடை குப்பென வீசியுள்ளது.

இதனையடுத்து பெண்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, தாம் அந்த பகுதியிலுள்ள வட்டிக்கு பணம் கொடுக்கும் ஒருவரின் வீட்டிற்கு வந்ததாகவும், அவர் மதுபானம் பருக தந்ததாகவும் பெண்கள் தெரிவித்தனர்.

இளைஞர்களுடன் வாய்த்தகராறு

அதோடு போதை உச்சத்தில் இருப்பதால் தம்மால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை, தம்மை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இளைஞர்கள் பெண்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து அவர்களை இளைஞர்கள் காணொளி எடுக்க , மகள் அங்கிருந்து ஓடிச்சென்று, அருகிலுள்ள பற்றையொன்றுக்குள் மறைந்து இளைஞர்களுடன் வாய்த்தகராற்றில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.





Source link

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்