முன்னாள் எம்.பி.சிவமோகன் பயணித்த வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து !
மட்டக்களப்பு காத்தான்குடி தாழங்குடாப் பகுதியில் இன்று அதிகாலை, முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிவமோகன் பயணித்த வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
அம்பாறை உகந்தை மலை முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த போதே வாகனத்தின் டயரில் காற்று குறைந்ததன் காரணமாக வாகனம் வீதியைவிட்டு இழுத்துச் செல்லப்பட்டு அருகே இருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.
வாகனத்திலிருந்த எயார்-பாஃக் வெளிவந்ததால் வாகனத்திலிருந்தவர்கள் உயிராபத்தின்றி தப்பித்துள்ளனர்.வாகனத்தில் இருந்தவர்கள் விபத்தின் காரணமாக சிறு அதிர்ச்சிக்குள்ளாகியதால் தனியார் வைத்தியசாலையொன்றில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, முன்னாள் எம்.பி.சிவமோகன் பயணித்த வாகனம் மின்கம்பத்தில் மோதி விபத்து !