Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஅம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்.


(நூருல் ஹுதா உமர்)

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.ஜெயராஜன் நேற்று (10) தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந் நியமனத்தை வழங்கி இருக்கின்றது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்திக அபேவிக்ரம முன்னிலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், பிரதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்