ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

இலங்கை – பங்களாதேஷ் இடையில் பயணிகள் படகு சேவை !

இலங்கைக்கும் பங்களாதேஸுக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை மேற்கொள்வது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கவனம் செலுத்தியுள்ளார்.டில்லியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு கலந்துரையாடலில் பயணிகள் படகு சேவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் பங்களாதேஷிற்கும் இலங்கைக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடுவது குறித்தும் இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியதோடு, இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்ததன் பின்னர் பங்களாதேஸுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்களாதேஷ் பிரதமரிடம் தெரிவித்தார்.

இலங்கையில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்திற்கு பங்களாதேஷ் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பங்களாதேஷ் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

, இலங்கை – பங்களாதேஷ் இடையில் பயணிகள் படகு சேவை !

Back to top button