ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கனடாவில் தேசிய ரீதியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மாணவி அபிஷா சாதனை.

ரவிப்ரியா

கனடாவில் தேசிய ரீதியில் நடைபெற்ற பிரெஞ் மொழியிலான எழுத்துக் கூட்டற் போட்டியில் இலங்கை மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்ட மாணவி அபிஷா செபமாலைமுத்து இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு லேக்வீதி -2ஐ, பூர்வீகமாகக் கொண்ட கனடாவில் வதியும் செபமாலைமுத்து ஜெய்சி ஷாமா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியாவார்.

மொன்றியல் மாகாணத்தில் கல்வி பயிலும் தாய் மொழியை தமிழாக கொண்ட ஒருவர்.  கனடா வரலாற்றில் முதல் தடவையாக தேசிய ரீதியில் பிரெஞ்சு மொழியில் சாதனை புரிந்துள்ளது குறித்து அங்குள்ள பிரெஞ்சை தாய் மொழியாகக் கொண்டவர்கள் வெகுவாக பாராட்டுகின்றார்கள். பிரஞ் மொழியை தாய் பொழியாகக் கொண்ட மாணவர்கள் தவறவிட்ட சொற்களை இவர் செம்மையாக கூறியதால் அரங்கு அதிர்ந்த கரகோஷத்தின் மத்தியிலேயே இந்த சாதனையை அவர் புரிந்துள்ளார்.

பாடசாலையில் தெரிவாகி மொன்றியல் நகர்புற பாடசாலைகளிலும் தேறி தேசிய ரீதியில் டொறண்டோவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 34 போட்டியாளர்களுடன் மோதியே இந்த அபூர்வ சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கும் குறிப்பாக மட்டுமா நகருக்கும் பெரும் புகழையும் பெருமையையும் தேடிக் கொடுத்துள்ளார்.   

, கனடாவில் தேசிய ரீதியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மாணவி அபிஷா சாதனை.

Back to top button