ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இரண்டு இராணுவ கோப்ரல்கள் கைது !

சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இரண்டு இராணுவ கோப்ரல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹோமாகம பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட் விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, ஒருவர் பனாகொட இராணுவ முகாமின் கோப்ரல் எனவும் அவர் அதே தளத்தில் கடமையாற்றும் மற்றையவருக்கு சிகரெட்டுக்களை வழங்க முற்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

கைதான சந்தேக நபர்கள் 43 மற்றும் 44 வயதுடையவர்கள் என்றும் நொச்சியாகம – மாரகஹவெவ மற்றும் நிட்டம்புவ – கல்எலிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, சந்தேக நபர்களிடமிருந்து 600 சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளோடு, சந்தேக நபர்கள் இருவரும் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

, சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் இரண்டு இராணுவ கோப்ரல்கள் கைது !

Back to top button