ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பெரியகல்லாற்றில் நடைபெற்ற தொழிற்பயிற்சி பெற்ற பெண்களுக்கான பஷன் அக்கடமியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

    

ரவிப்ரியா

கடந்த 6 வருடங்களாக
யாழ்ப்பாணத்தை தலைமையகமாக
கொண்டு இயங்கும்
பஷன் அக்கடமியின்
மட்டக்களப்பு கிளையின்
சான்றிதழ் வழங்கும்
நிகழ்வு சனியன்று
(08)
காலை பெரியகல்லாறு
அல்பா மண்டபத்தில
மட்;டக்களப்பு
கிளை முகாமையாளர்
திருமதி ஆர்த்திகா
கவிவாசன் தலைமையில்
நேர்த்தியாக நடைபெற்றது.

பிரதம விருந்தினரும் பஷன் அக்கடமியின் தலைமையக முகாமைத்துவப் பணிப்பாளர்
திருமதி பிரமிளா தவசுதனும், விசேட அதிதியாக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப்பெண்கள் ;அபிவிருத்தி உத்தியோகத்தர் சந்திரவாணி
மனோகரன் மற்றும் அழைப்பு அதிதிதியாக
ஓய்வுநிலை நில அளவைத்திணைக்கள அத்தியட்சகர்
கு.கதாகரனும்
கலந்து கொண்டனர்.

கல்முனை, களுவாஞ்சிக்குடி, கல்லாறு பிரதேசங்களைச் சேர்ந்த
80
பயனாளிகள் சான்றிதழ்
பெறுவதற்காக வருகை தந்திருந்தனர்.

அதிதிகள் மலர்மாலை
அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கலவிளக்கேற்றி மௌன வணக்கம் செலுத்தி
தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து
கணேஷாலயாவின் கண்கவர் வரவேற்பு நாட்டிய நிகழ்வுகளுடன், அதிதிகள்
உரை இடம்பெற்று
சான்றிதழ்களை அதிதிகள்
மூவரும் வழங்கி வைத்தனர்.

விசேட அதிதியான
பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி
உத்தியோகத்தர் சந்திரவாணி  தனதுரையில், பெண்களின்
அபிவிருத்தியை பொருளாதார
ரீதியில் பலப்படுத்துவதற்கும் சுய தொழிலை அவர்களாகவே
உருவாக்கிக் கொள்வதற்குமான இந்த முயற்சியானது வரவேற்புக்குரியது.

பெண்கள் நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கு
முதுகெலும்பாகவே செயற்படுகின்றார்கள். இன்று வெளிநாட்டு செலவாணியை
பெருமளவு பெற்றுத்
தரும் மலையக தேயிலை தோட்டங்களில
வேலை செய்யும்
பெண்கள் எத்தனையோ
சவால்களுக்கு முகம் கொடுத்து குடும்ப தலைமையையும் ஏற்று முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை. குடும்ப சுமையை சமாளிப்பதிலும் சாதனை புரிவதிலும் வல்லவர்கள்.
இந்த சான்றிதழை
பெற்றுக் கொள்ளும்
பெண்கள் சுயமாக சொந்தக் காலில் நின்று போதியளவு
குடும்ப வருமானத்தைப்
பெற்றுக் கொள்ளக் கூடியவாறு இந்த ஆரி வேர்க் (தையல் சம்பந்தமான)
பயிற்சிநெறி இவர்களுக்குச் சிறந்த வரப்பிரசாதமாக அமைகின்றது.

இன்று நாட்டில்
உள்ள முக்கிய பிரச்சனை வருமானம்
போதாததே. அனேகமாக பெண்களே குடும்பச்
சுமையைத் தாங்குகின்றனர். ஆண்கள் தாங்கள் உழைக்கும்
வருமானத்தில் அரைவாசிக்குமேல் தங்களுக்காக
ஒதுக்கிவிட்டு அரைவாசியைத்தான் மனைவியிடம்
கொடுக்கின்றனர். கணவனும் மனைவியும் நல்ல புரிந்துணர்வுடன் நடந்து கொண்டால்தான் குடும்பம்
சுமூகமாக நடக்கும்.
பிள்ளைகள் ஒழுங்காக
படிக்க முடியும்.

இத்தகைய நிலைமைகளில்
இருந்து விடுபடுவதற்கு பெண்கள் சுய தொழில்களை
ஆரம்பிப்பதற்கு இத்தகைய பயிற்சிகள் அடித்தளமாக
அமையும் என்பதில்
ஐயமில்லை என்று குறிப்பிட்டார்.

பிரதம அதிதியும்  தனதுரையில் மட்டக்களப்பில் ஆரி வேர்க் பயிற்சியை
மட்டுமே நடாத்திக்
கொண்டிருக்கின்றோம். அது வெற்றிகரமாக நடந்து கொண்டிருப்பதால் காலக்கிரமத்தில் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதுபோல் தையல் வகுப்புக்கள், கேக் ஐசிங் வகுப்புக்கள்
ஆபரண வகுப்புக்கள், கேக் ஐசிங் வகுப்புக்கள், பேசியல் மற்றும் மணப்பெண்
அலங்கார வகுப்புக்கள்
என ஒவ்வொன்றாக
படிப்படியாக இங்கும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

பெண்களுக்காக பெண்களால்
நடாத்தப்பட்ட ஒரு சிறப்பு நிகழ்வாகவே
இதைக் காணக் கூடியதாக இருந்தது.
அத்துடன் மிகக் குறைந்தளவு அதிதிகளுடன்
நோக்கத்திற்கு முன்னுரிமை
அளித்து குறுகிய நேரத்துள் முடிந்த தரமான நிகழ்வாகவும்
இது அமைந்தது

 

, பெரியகல்லாற்றில் நடைபெற்ற தொழிற்பயிற்சி பெற்ற பெண்களுக்கான பஷன் அக்கடமியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

Back to top button