ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை திறப்பு!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்காகச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உகந்தை முருகன் ஆலயத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.

கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 22ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. முருக பக்தர்கள் பாத யாத்திரையாக உகந்தை வரை சென்று அங்கிருந்து காட்டுப்பாதை ஊடாக கதிர்காமத்தைச் சென்றடைவார்கள் .

, கதிர்காம பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை திறப்பு!

Back to top button