கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான கட்டடங்களை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொழும்பில் கால்வாய்களை அடைத்து சுமார் 500 சட்ட விரோத கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்தக் கட்டடங்களை வேறு இடத்துக்கு மாற்றுவதற்குக் கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறான பல நிர்மாணங்கள் நீரின் ஓட்டத்தை தடை செய்துள்ளன.
இதனால் கொழும்பு நகரில் அடிக்கடி வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. சில குடியிருப்புகள் நேரடியாக நீர் வழிகளைத் தடுக்கின்றன. மற்றவைகால் வாய்ப் படுகைகளில் கட்டப்பட்டுள்ளன.-
என்றார்.