ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

அலங்கார ஊர்திகளுடன் எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் கொண்டாடிய பவள விழா

(சித்தா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புக் கல்வி வலயத்தின் எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் கடந்த 06.06.202 ஆம் திகதி தனது பவள விழாவினை அதிபர் சி.தீபதர்ஷன் தலைமையில் பாடசாலையில் கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.

பவளவிழாவினைக் கொண்டாடுமுகமாக இன்று 08.06.2024 நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. இந் நடைப் பயணமானது பாடசாலையின் பவள விழாக் குழுவினரின் ஏற்பாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் பங்பற்றியிருந்தனர்.

வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்ட நடைப்பயணத்தில் பாடசாலையின் வளர்ச்சியினை வெளிக்காட்டுமுகமாக பல ஊர்திகள் பங்குபற்றிருந்தன. பழைய மாணவர்களின் வர்ண உடைகளும் நடைப்பயணத்தை அலங்கரித்திருந்தன. அத்துடன் தொன்மையை வெளிப்படுத்திய மாட்டு வண்டிப் பயணமும் நடைப்பயணத்தை மேலும் வளப்படுத்தின.

நடைப்பயணமானது பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு களுவாஞ்சிகுடி நகரத்தை அடைந்து பின்னர் வைத்தியசாலை வழியாக எருவில் கிராமத்தின் ஊடாக குருமண்வெளி, மகிழூர் போன்ற கிராமங்களை ஊடறுத்து சுமார் 15 கிலோமீற்றர் கடந்து மீண்டும் பாடசாலையினை வந்தடைந்தது.

 

, அலங்கார ஊர்திகளுடன் எருவில் கண்ணகி மகா வித்தியாலயம் கொண்டாடிய பவள விழா

Back to top button