ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
போதைப்பொருள் கடத்திய சிறைச்சாலை அதிகாரி கைது !
போதைப்பொருள் கடத்திய சிறைச்சாலை அதிகாரி ஒருவர் இன்று (08) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளை கொண்டு செல்லும்போது நிவித்திகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் பணிபுரியும் ஜெயிலர் என தெரிவிக்கப்படுகிறது.
இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாசவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் ஐஸ் போதைப்பொருளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர், இரத்தினபுரி – கலவானை பிரதான வீதியில் கெட்னிவத்தையில் பொலிஸ் வீதித்தடையை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரியாக கடமையாற்றி சில காலமாக ஐஸ் போதைப்பொருளை கடத்தி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
, போதைப்பொருள் கடத்திய சிறைச்சாலை அதிகாரி கைது !