Tuesday, June 18, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local News112,500 கஞ்சா செடிகளுடன் மூவர் கைது !

112,500 கஞ்சா செடிகளுடன் மூவர் கைது !

மொனராகலையில் கோணஹங்கார பொலிஸ் பிரிவில் 112,500 கஞ்சா செடிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோணஹங்கார பொலிஸார் தெரிவித்தனர்.

கோணஹங்கார பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மடஹடல யால வனப்பகுதியில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக புத்தல விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது பயிரிடப்பட்ட 112,500 கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளனர்.

42, 42, 48 வயதுகளையுடைய எம்பிலிபிடிய பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனமல்வில பகுதியைப் சேர்ந்த இருவர் என மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் கோணஹங்கார பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், சந்தேக நபர்களை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோணஹங்கார பொலிஸார் தெரிவித்தனர்.

, 112,500 கஞ்சா செடிகளுடன் மூவர் கைது !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்