Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsநீதிமன்றத்தில் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய தம்பதி கைது !

நீதிமன்றத்தில் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய தம்பதி கைது !

களுத்துறை (Kalutara) நீதவான் நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையாற்றும் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய கணவன் மனைவி தம்பதியொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கையானது, நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்வத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றில் முன்னிலையாவதற்காக மனைவியுடன் வந்திருந்ததாகவும், தகாத ஆடைகளை அணிந்திருந்ததாக பிரதான வாயிலில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் தெரிவித்ததையடுத்து, இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை உத்தியோகத்தர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

, நீதிமன்றத்தில் காவல்துறை உத்தியோகத்தரை தாக்கிய தம்பதி கைது !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்