ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
கார் மீது ரயில் மோதி இருவர் பலி !

எடேரமுல்ல ரயில் கடவையில் இன்று காலை இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ரயில் கடவையில் மோட்டார் வாகனம் ஒன்றின் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று காலை எடேரமுல்ல பகுதியில் இருந்து வத்தளை நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் மீது, பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்த 54 வயதுடைய பியகம பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கொழும்பு பிரதேசத்தில் தனியார் துறையில் பணிபுரியும் 34 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் எடேரமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
, கார் மீது ரயில் மோதி இருவர் பலி !