இன்று பல பகுதிகளுக்கு கடும் மழை வீழ்ச்சி !


நாட்டில் பெய்துவரும் மழையுடனான வானிலை இன்று (08) முதல் சற்று அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழையுடனான வானிலையை எதிர்பார்க்க முடியும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடை மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிடுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
, இன்று பல பகுதிகளுக்கு கடும் மழை வீழ்ச்சி !