Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local News15 வயது மாணவன் கொ லை – கைதான மாணவனுக்கு விளக்கமறியல் !

15 வயது மாணவன் கொ லை – கைதான மாணவனுக்கு விளக்கமறியல் !

15 வயது பாடசாலை மாணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த மாணவனை ஏனைய கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தி அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை – சிப்பிக்குளம் பகுதியில் உள்ள பயிற்சி வகுப்பு ஒன்றிற்கு அருகில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 15 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பத்தேவெல பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

ஹம்பாந்தோட்டை நகரிலுள்ள பாடசாலையொன்றில் 10ஆம் தரத்தில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவன் நேற்று முன்தினம் மாலை சிப்பிக்குளம் பகுதிக்கு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அதன்போது ஹம்பாந்தோட்டையில் உள்ள மற்றுமொரு பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயதுடைய மாணவன் குறித்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு இலக்கான மாணவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்கான காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

, 15 வயது மாணவன் கொ லை – கைதான மாணவனுக்கு விளக்கமறியல் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்