ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு முடிவு !

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பாடப்புத்தகங்களை வழங்குவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், கொலன்னாவ மற்றும் களனிமுல்ல பிரதேசங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாடப் புத்தகங்களை இழந்த பாடசாலை மாணவர்களின் அவல நிலை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் பிரேமஜயந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள், வெள்ளத்தினால் பாடசாலை பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு உதவுவதற்கு அமைச்சுடன் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுக்கவுள்ளேன்” என தெரிவித்தார்.
, வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்க கல்வி அமைச்சு முடிவு !