வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமும் சடங்கும்.
(சித்தா)
ஈழக் கிழக்கின் எழுஞாயிறாக பாடும்
மீன்
பண்ணிசைக்கும் நகரின்
தென்கோடியிலே அமைந்துள்ள நாதனை
ஆற்றோடு நாற்புறமும் சூழ
வயல்
நிலங்கள் கொண்டு
எழில்
ஓங்கும் வெல்லாவெளிக் கிராமத்திலே வேம்பு
விருட்சத்தின் அடியினிலே கோயில்
கொண்டு
பன்னெடுங்காலமாய் வீற்றிருந்து அருளாட்சி புரிகின்ற ஸ்ரீ
முத்துமாரியம்மன் ஆலய
வருடாந்த அலங்கார உற்சமும் சடங்கும் நிகழும் குரோதி
வருடம்
வைகாசித்திங்கள் 29 ஆம்
நாள்
செவ்வாய்க் கிழமை
11.06.2024 முன்னிரவு பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி திருக்கதவு திறத்தலும் மக
நட்சத்திரமும் ஸ்கந்த
பஞ்சமியும் கூடும்
சுபமுகூர்த்த வேளையில் கும்பஸ்தானமும் இடம்பெற்று ஆனித்திங்கள் 07 ஆம்
நாள்
21.06.2024 வெள்ளிக்கிழமை காலை
பூரணைத் திதியில் தீர்த்த உற்சவத்துடன் நிறைவு
பெறும்.
இத் தினங்களில் விஷேட
பூசைகளும் அம்மன்
அருளால் நோய்
தீர்க்கும் மருந்தும் வழங்கப்படுவதுடன் நாதனைப் பிள்ளையாரடி, நாச்சிமார் கல்லடியில் விஷேட
பூசை
வழிபாடுகளும், அம்மனின் தீமிதிப்பும் தவநிலையும், விபூதிப் பிரசாதம் வழங்களும் இடம்பெறும்.
, வெல்லாவெளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமும் சடங்கும்.