ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
தேசிய மல்யுத்த போட்டியில் சாதித்த ஆரையம்பதி இளைஞன் !


2024 ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவில் இடம்பெற்ற மல்யுத்த போட்டியில் இலங்கையில் சிறந்த விளையாட்டு வீரராக மட்டு, ஆரையம்பதியைச் சேர்ந்த வீரன். முரளிதரன் பிரவீன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.
2024 ஆண்டுக்கான 48 வது தேசிய விளையாட்டு விழாவானது கடந்த 01, 02.06.2024 ம் திகதிகளில் இலங்கை, கேகாலையில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் “சாண்டோ சங்கிரதாஸ்” விளையாட்டு கழகத்தினால் மேலதிகமாக பயிற்றப்பட்ட, திரு. முரளிதரன் பிரவீன் அவர்கள் 92kg நிறை பிரிவில் கிழக்கு மாகாணம் சார்பாக போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்று, தங்கப்பதக்கத்தை சுவிகரித்தார். அத்தோடு இந்த ஆண்டுக்கான சிறந்த மல்யுத்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
, தேசிய மல்யுத்த போட்டியில் சாதித்த ஆரையம்பதி இளைஞன் !