ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பெரியகல்லாற்றில் ‘மட்டக்களப்பு தேசத்தில் கடல்நாச்சியம்மன் வழிபாடு’ எனும் நூல் மற்றும் கடல்நாச்சியம்மன் பள்ளு ஒலித்தட்டு வெளியீட்டு விழா.

(ரவிப்பிரியா)

சைவப் புலவர்,
சைவ
பண்டிதர் சுந்திரமூர்த்தி துஷ்யந்த் எழுதிய
மட்டக்களப்பு தேசத்தில் கடல்நாச்சியம்மன் வழிபாடுஎனும்
நூல்
மற்றும் கடல்நாச்சியம்மன் பள்ளு
ஒலித்தட்டு என்பவற்றிற்கான வெளியீட்டு விழா
பெரியகல்லாறு கடலநாச்சியம்மன் வளாகத்தில் அமைக்கப்ட்ட பிரத்தியேக பிரமாண்ட மேடையில் 25.05.2024 சனிக்கிழமை மாலை
ஸ்ரீ
சர்வார்த்த சித்தி
விநாயகர் ஆலய
வண்ணக்கர் என்.கமல்ராஜ் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

முதன்மை அதிதிகளாக இந்துசமய கலாசார
அலுவல்கள் திணைக்கள உதவிப்
பணிப்பாளர் ஹேமலோஜினி, கிழக்குப் பல்கலைக் கழக
கலை
கலாசாரபீட பீடாதிபதி கலாநிதி .குணபாலசிங்கம்
ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக சைவப்
புலவர்
சைவபண்டிதர் கலாநிதி சா.தில்லைநாதன், கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர்
கலாநிதி நா.வாமன் ஆகியோர் கலந்து
கொண்டனர்.

நூலாசிரியர் அதிதிகளுக்கு நூல்ப்
பிரதிகளை வழங்கிக் கௌரவித்ததுடன் அவர்களால் கடல்நாச்சியம்மன் பள்ளு
ஒலித்தட்டும் சம்பிரதாயபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. 

பள்ளு இசைக்கேற்ப கணேஷாலாயா நடன
பள்ளி
மாணவர்களின் நாட்டிய அரங்கேற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதேபோல் பரதகலாஞ்சலி நாட்டியாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும் நிகழ்வை மெருகூட்டியது.

இந் நிகழ்வில் நடனம்
பயிற்றுவித்த நாட்டிய ஆசிரியர்கள் மற்றும் பங்குபற்றிய மாணவர்களும் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டனர்.

 

, பெரியகல்லாற்றில் ‘மட்டக்களப்பு தேசத்தில் கடல்நாச்சியம்மன் வழிபாடு’ எனும் நூல் மற்றும் கடல்நாச்சியம்மன் பள்ளு ஒலித்தட்டு வெளியீட்டு விழா.

Back to top button