ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் !

நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(04) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 14 சதமாகப் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாய் 7 சதமாகக் காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 82 சதமாகப் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 306 ரூபாய் 67 சதமாகக் காணப்பட்டது.

, அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் !

Back to top button