ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

4 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய நபர் !

ஆண் குழந்தை ஒன்று நபரொருவரால் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் வெலிஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த காணொயில் பார்க்கும் போது குறித்த குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கும் என யூகிக்க முடிகிறது.

உணவு உண்ணும் போது விலங்குகளைக் கூட தாக்காத இந்த சமூகத்தில், வாயில் உணவு இருக்கும் போதே இவ்வாறு தாக்குவது மனிதாபிமானமற்ற கொடூர செயலாகும்.

ஒரு மனிதனால் ஈவிரக்கம் இல்லாமல் இப்படி ஒரு குழந்தையை தாக்க முடியுமா?

குறித்த காட்டுமிராண்டி நபரால் தாக்கப்படும் குழந்தை தூக்கி எறியப்பட்டு ஒரு மூலையில் விழுந்து, உணவு கோப்பையை கையில் எடுத்து சாப்பிடும் காட்சி பார்ப்பவர்களின் மனதை உலுக்குகிறது.

இந்தத் தாக்குதலை நடத்தியவர் குழந்தையின் தந்தையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் வினவிய போது, ​​சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பத்தினர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

, 4 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய நபர் !

Back to top button