ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
காட்டு யானை தாக்கி ஒருவர் பலி !

மெதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹலம்பகஸ்வெவ பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹலம்பகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது காணிக்கு வந்த காட்டு யானையை விரட்ட முற்பட்ட போதே யானை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, காட்டு யானை தாக்கி ஒருவர் பலி !