ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் !

சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று (04) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் நாளையும் (05) இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோமாகம, கம்பஹா, களனி ஆகிய கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கும் கடுவெல பிரிவில் உள்ள பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் வானிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானங்களை பிராந்திய கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது

, பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு எடுத்த தீர்மானம் !

Back to top button