Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsதண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சாரதி கைது !

தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சாரதி கைது !

ரயில் தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சம்பவம் தொடர்பில் அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய சாரதி, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பு – எம்பிலிப்பிட்டிய தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புவக்பிட்டியவில் உள்ள களனிவெளி ரயில் மார்க்கத்தில் சாரதி, பேருந்தை இயக்கிச் செல்லும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்குரிய சாரதியுடன் சம்பந்தப்பட்ட பேருந்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

, தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சாரதி கைது !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்