Sunday, June 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsகல்முனை வீதியில் மின்கம்பத்தில் மோதி விபத்து : ஒருவர் பலி !

கல்முனை வீதியில் மின்கம்பத்தில் மோதி விபத்து : ஒருவர் பலி !

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடத்தில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

களுவதாளைக் கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய திவாகரன் ஹபிசாயன் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார் .

குறித்த இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் கிரான்குளம் பகுதியிலிருந்து களுதாவளை நோக்கி மிகவும் வேகமாக சென்ற போது ,மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் வளைவு பகுதியில் வைத்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது .

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படுகாயமடைந்தவர் களுவாஞ்சிகுடி ஆதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றது.

மேலும், இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

, கல்முனை வீதியில் மின்கம்பத்தில் மோதி விபத்து : ஒருவர் பலி !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்