Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local News50 பேர் கொண்ட குண்டர் கும்பல் வீட்டின் மீது தாக்குதல் : ஒருவர் படுகாயம் !

50 பேர் கொண்ட குண்டர் கும்பல் வீட்டின் மீது தாக்குதல் : ஒருவர் படுகாயம் !

யாழ். அச்சுவெலி பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின்மீது, சுமார் 50 பேர் கொண்ட குண்டர் கும்பலொன்று தாக்குதல் நடத்தியதில், வீட்டின் உடமைகள் சேதமடைந்துள்ளதோடு, ஒருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ். அச்சுவேலி கைத்தொழில் பேட்டையில் உள்ள பண்ணை ஒன்றினுள் காணப்பட்ட வீட்டின் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞன் மீது நேற்று மதியம் வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 20 இக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 50 பேர், குறித்த பண்ணை வீட்டினுள் புகுந்து, அங்கு தாக்குதல் நடத்தி, வீட்டின் உடமைகளுக்கும் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீயினை அணைத்துள்ளதுடன் அச்சுவேலி பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் பிரகாரம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆரம்ப கட்ட விசாரணைகளில் முன் பகையே தாக்குதலுக்கு காரணம் என தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

, 50 பேர் கொண்ட குண்டர் கும்பல் வீட்டின் மீது தாக்குதல் : ஒருவர் படுகாயம் !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்