Sunday, June 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsமூதூர் களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் பலி !

மூதூர் களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் பலி !

மூதூர் , புதிய இறங்குதுறை வீதியிலுள்ள களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றுள்ளது.

மூதூர் -அக்கரைச்சேனை சேர்ந்த 08 வயதுடைய இர்பான் இபாம் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

வீதியோரத்திலுள்ள களப்புக் கடலில் மூன்று சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்த போது மூவரும் நீரில் மூழ்கியுள்ளனர் . அப்போது வீதியால் சென்றவர்கள் சிறுவர்களை காப்பாற்ற முயற்சித்துள்ளதுடன் இரண்டு சிறுவர்களை காப்பாற்ற முடிந்ததாகவும் மற்றய சிறுவனை காப்பாற்ற முடியாமல் சென்று சிறிது நேரத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

உயிரிழந்த சிறுவனின் ஜனாஸா தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நீதிவான் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது .

மேலும் சம்பவம் தொடர்பிரலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

, மூதூர் களப்புக் கடலில் மூழ்கி சிறுவன் பலி !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்