Sunday, June 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsநாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த வாகனம் விபத்து !

நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த வாகனம் விபத்து !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று அதிகாலை கொழும்பு – கண்டிவ பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நளின் பண்டார பயணித்த ஜீப் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது

நாடாளுமன்ற உறுப்பினரின் கார் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கோ அல்லது பயணித்த எவருக்கோ காயம் ஏற்படவில்லை எனவும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மேலும் நிட்டம்புவ பொலிஸார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த வாகனம் விபத்து !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்