Tuesday, June 18, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsஉணவுப்பணவீக்கம் மே மாதத்தில் வீழ்ச்சி !

உணவுப்பணவீக்கம் மே மாதத்தில் வீழ்ச்சி !

உணவுப்பணவீக்கம் மே மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.5 சதவீதமாகக் காணப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் மே மாதத்தில் 0.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் ஏப்ரல் மாதத்தில் 3.3 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பணவீக்கம் மே மாதத்தில் 0.0 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.அதேநேரம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப் பணவீக்கம் மே மாதத்தில் 1.3 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

, உணவுப்பணவீக்கம் மே மாதத்தில் வீழ்ச்சி !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்