ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் !

மாலைத்தீவுகளின் வௌிவிவகார அமைச்சர் மூஸா சமீர் எதிர்வரும் 03 ஆம் திகதி முதல் 06 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூஸா சமீர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழு, வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

, மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் !

Back to top button