சட்டவிரோத ஜீப் வண்டிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு !


சுமார் 300 மில்லியன் ரூபா வருமானத்தை சுங்கப்பகுதி இழப்பதற்கு காரணமாக இருந்த சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 60 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஆறு சொகுசு ஜீப் வண்டிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (31) உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஜீப் வண்டிகள் தொடர்பில் மோட்டார் போக்குவரத்து வாகனப் பதிவு கணினி கட்டமைப்பிலுள்ள தரவுகளை நீக்கி முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆறு முறைப்பாடுகளை முன்வைத்து விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், இந்த வண்டிகளை ஏழாம் திகதிக்கு முன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று மொன்டெரோ ரக ஜீப் வண்டிகள் மற்றும் மூன்று லேன்ட்குறுஸ் ஜீப்புகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
, சட்டவிரோத ஜீப் வண்டிகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு !