Sunday, June 23, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsகுழந்தைகளுக்கு திரிபோஷாவுக்கு பதிலாக அரிசியில் இருந்து புதிய போஷாக்குணவு !

குழந்தைகளுக்கு திரிபோஷாவுக்கு பதிலாக அரிசியில் இருந்து புதிய போஷாக்குணவு !

குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவுக்கு பதிலாக அரிசியிலிருந்து மற்றுமொரு போஷாக்கான உணவை உற்பத்தி செய்வதற்கு தமது நிறுவனம் தயாராகவுள்ளதாக லங்கா திரிபோஷா நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனைத் தயாரிக்க அரைக்கும் இயந்திரம் தேவை எனவும் அதற்கு சுமார் 400 மில்லியன் ரூபா செலவாகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம், அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தலைமையில் அண்மையில் (22) பாராளுமன்றத்தில் கூடிய போதே இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் அதில் பாதி தொகையை அரசாங்கம் வழங்கினால் மீதிப் பணத்தை உலக உணவுத் திட்டம் வழங்கத் தயாராக இருப்பதாக லங்கா திரிபோஷ நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்படி இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாக பாராளுமன்ற சிறுவர் ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

அத்துடன் திரிபோஷா உற்பத்திக்காக உயர்தர சோளத்தை பயிரிட வேண்டியதன் அவசியம் குறித்தும், திரிபோஷ உற்பத்தி காலம்வரை அந்த தரத்தை பேணிச் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் நீண்ட நேரம் இங்கு கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் லங்கா திரிபோஷா நிறுவனத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

, குழந்தைகளுக்கு திரிபோஷாவுக்கு பதிலாக அரிசியில் இருந்து புதிய போஷாக்குணவு !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்