ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
குழந்தைகளுக்கு திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம் !
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆறு மாதங்கள் முதல் 03 வருடங்கள் வரையான குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷாவின் உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதாக பாராளுமன்ற சிறுவர் ஒன்றியத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்தன தெரிவித்தார். இதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதியில் நாட்டில் போசாக்கு தேவைகள் இனங்காணப்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதற்கு இந்த திரிபோஷாவை நிபந்தனையுடன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
, குழந்தைகளுக்கு திரிபோஷா உற்பத்தி மீண்டும் ஆரம்பம் !