ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
30 ஆண்டுகளாக பழுதடையாமல் இருக்கும் Burger : சமூக வலைத்தளங்களில் விவாதம் !
அவுஸ்திரேலியாவில் 30 ஆண்டுகளாக Burger என்ற வெதுப்பக உணவு, பழுதடையாமல் இருப்பதாக வெளியான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கேசிடீன் மற்றும் எட்வார்ட்ஸ் நிட்ஸ் ஆகியோர் கடந்த 1995ஆம் ஆண்டில் அடிலெய்டில் உள்ள உணவகமொன்றில் Burger ஒன்றை வாங்கியுள்ளனர்.
Burger ஐ வாங்கிய இளைஞர்கள் அதனை நீண்ட நாட்கள் அப்படியே வைத்தால் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்பதற்காக உண்ணாமல் குறித்த Burger ஐ பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.
சுமார் 30 ஆண்டுகள் கடந்த பின்னரும் Burger இல் நுண்ணுயிர் வளர்ச்சியின் அறிகுறிகள் தென்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலான நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
, 30 ஆண்டுகளாக பழுதடையாமல் இருக்கும் Burger : சமூக வலைத்தளங்களில் விவாதம் !