ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
காத்தான்குடியில் 70 பக்கெட் காம மதன லேகியம் கைப்பற்றப்பட்டது: கடை உரிமையாளர் கைது !
மட்டக்களப்பு காத்தான்குடி சேர்.ராசீக் பரீட் மாவத்தையிலுள்ள கடை ஒன்றிலிருந்து 70 பக்கெட் காம மதன லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்தனர். குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நபரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்கா தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
, காத்தான்குடியில் 70 பக்கெட் காம மதன லேகியம் கைப்பற்றப்பட்டது: கடை உரிமையாளர் கைது !