Thursday, June 13, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsபாதுகாப்பு அமைச்சின் பரிந்துரை தேவை !

பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரை தேவை !

சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ள ஆண்கள், சுற்றுலாப் பயணிகளாகவே அங்கு செல்லவுள்ளதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதென வெளிவிவகார தெரிவித்துள்ளது.

நேற்று 30 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருவதுடன் சுற்றுலா விசா மூலம் ஓய்வு பெற்ற இராணுவத்தினர் ரஷ்யாவுக்கு செல்வதை இரத்து செய்யும் வகையில், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரேன் யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை அதிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என, ரஷ்யாவிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் அவர்களை அங்கிருந்து விடுவிப்பது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர் , இது சம்பந்தமாக தற்போது ரஷ்ய வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ரஷ்ய அதிகாரிகளுடன் மேலும் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக எதிர்வரும் ஜூன் (05) அல்லது (07) விஷேட குழுவொன்று ரஷ்யாவுக்கு செல்ல வுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்ட அதிகாரிகளுடன் அங்கு பேச்சு வார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளி விவகார அமைச்சில் நேற்று இடம்பெற்றுள்ள செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளஅவர்,

இதுவரை ரஷ்ய ராணுவத்தில் இணைந்து யுத்தத்தில் ஈடுபடும் இலங்கையர்களான முன்னாள் பாதுகாப்பு படையினர் தொடர்பில் 455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 37 பேர் காயமடைந்தும் 16 பேர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவின் மொஸ்கட்டிலுள்ள இலங்கை தூதுவராலயம் இவர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதேவேளை இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் லெவன் எஸ் செகரியன் அது தொடர்பில் தெரிவிக்கையில்; ரஷ்யாவுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள எவரும் சட்டப்பூர்வமான அறிக்கையை சமர்ப்பித்தால் விசாவை விநியோகிக்க முடியும். கல்வி மற்றும் கலாசாரம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக ரஷ்யாவுக்கு செல்ல பெருமளவிலானோர் விசாவுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

, பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரை தேவை !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்