ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

நீர் மின் உற்பத்தி 40% ஆக உயர்வு !

தற்போது பெய்துவரும் கனமழையால் நீர் மின் உற்பத்தி சுமார் இருமடங்கு அதிகரித்துள்ளது.

தற்போதைய மழை நிலைமையுடன் நீர் மின் உற்பத்தி 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

மழையுடனான வானிலை ஆரம்பமாகுவதற்கு முன்னர் நீர் மின் உற்பத்தியானது 20 சதவீதமாகவே காணப்பட்டதாக அவர் கூறினார்.

39 வீதமாக காணப்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர் கொள்ளளவு, தற்போது 60 வீதமாக உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

, நீர் மின் உற்பத்தி 40% ஆக உயர்வு !

Back to top button