சந்தேக நபரான ஆசிரியர் சி.ஐ.டியினரால் கைது !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்தபோது அவரது கொள்ளுப்பிட்டியிலுள்ள இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து, அங்குள்ள வளங்களை சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாக குற்றத்தடுப்பு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நவுன்துட்டுவ கிரந்திரிய பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது ஆசிரியரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டத்தின் போது கடந்தவருடம் மே (09) இரவு போராட்டக்காரர்களில் சிலர் அப்போதைய பிரதமரான ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து அங்குள்ள வளங்களுக்கு தீ, வைத்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 25 பேர் கைதுசெய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுமுள்ளனர். அந்தவகையில் 36 வயதான மேற்படி ஆசிரியரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்றும் அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
, சந்தேக நபரான ஆசிரியர் சி.ஐ.டியினரால் கைது !