கொவிட்19 ஐ விட பேரழிவை ஏற்படுத்தும் புதிய நோய் !

கொவிட்19 தொற்றை விட பேரழிவு தரும் புதிய நோயை தாக்குபிடிக்க உலகம் தயாராக இல்லையென, வைத்திய நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
புதிய தொற்றுக்கு டிஸீஸ் எக்ஸ் (X) என, சமூக வலைத்தளத்தில் பெயரிட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இந்த ‘Disease X’ க்கு உலகம் தயாராக இல்லை என்று ஏற்கனவே கூறியுள்ளார். உலகத் தலைவர்கள் இந்த ஆண்டின் ஒரு பகுதியை, அடுத்த தொற்றுநோய்க்கான தயாரிப்பு பற்றி விவாதித்துள்ளனர்.
கொவிட்19 தொற்றுநோயை விட இது 20 மடங்கு அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய வைரஸ்கள் என, இதன்போது இவர்கள், கலந்துரையாடினர். 2024 ஆம் ஆண்டின் உலகப் பொருளாதார மன்றத்தில் “டிஸீஸ் எக்ஸ்” தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக விலங்குகளின் வாழ்விடங்களில் மனித செயற்பாடு அதிகரிப்பதாலேயே, இவ்வறான தொற்று நோய்கள் ஏற்படுவதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
, கொவிட்19 ஐ விட பேரழிவை ஏற்படுத்தும் புதிய நோய் !