ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

அக்கரைப்பற்று பிரதேசங்களிலுள்ள நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு !

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள உணவு கையாளும் நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவு வகைகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகளை வைத்திருந்த உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி எப்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீனின் அறிவுறுத்தலுக்கமைய பிராந்திய சுற்றுச்சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பு வைத்தியர் ஏ.எஸ்.எம்.பெளசாத்தின் பங்களிப்போடு கடந்த சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இதன்போது நுகர்வோருக்கு அசெளகரியம் ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான செயல்களை இனிவரும் காலங்களில் செய்ய வேண்டாமென்று வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கியதாகவும் அவர் கூறினார். இச்சோதனை நடவடிக்கையில் அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி இஸ்மாயில் உட்பட சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

, அக்கரைப்பற்று பிரதேசங்களிலுள்ள நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிப்பு !

Back to top button