ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
நாட்டில் 15 லட்சம் பேர் புகைபிடித்தலுக்கு அடிமை !
நாட்டில் 15 இலட்சம் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர் என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.புகைப்பழக்கத்திலிருந்து இளையோர் பலர் விடுபட்டு வருகின்றனர்.
எனினும், அவர்களை மீண்டும் புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்க பல்வேறு வழிகளில் ஈர்ப்பு முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இளையோர், சிறுவர்களை புகைப்பழக்கத்துக்கு அடிமையாக்க புகையிலை நிறுவனங்கள் பல தந்திரங்களை மேற்கொள்கின்றன.
இது தொடர்பில் சமூகத்திலுள்ளவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
, நாட்டில் 15 லட்சம் பேர் புகைபிடித்தலுக்கு அடிமை !