மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2024 மே மாதம் 26 ம் திகதியன்று ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கட்டளை தளபதி Major General S A Kulathunge RWP RSP VSV USP psc
The Commander Security Forces – East கலந்து கொண்டார்.மட்டகளப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் தலைவர் T.திருநாவுக்கரசு ஐயா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் விசேட அதிதிகளாக அல் கிம்மா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பனிப்பாளரும் ஓட்டமாவடியில் இயங்கிவரும் DP Education IT campus ன் இணைப்பாளருமான மெளலவி அஷ்ஷெய்க் MMS ஹாறூன் ஸஹ்வி அவர்களும்,
அகீல் எமேர்ஜென்ஸி அமைப்பின் தலைவரும் முன்னாள் ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவருமான அல் ஹாஜ் ACM நியாஸ்தீன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இன மத வேறுபாடுகளை கடந்து மொழி ரீதியாக ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளிற்கு அமைய மூவின கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாம் கல்விக்கு வழங்கியுள்ள முக்கியத்துவம் குறித்து மெளலவி அஷ்ஷெய்க் MMS ஹாறூன் ஸஹ்வி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மேலும் மெளலவி அஷ்ஷெய்க் MMS ஹாறூன் ஸஹ்வி மற்றும் அல் ஹாஜ் ACM நியாஸ்தீன் ஆகியோரின் நிதி அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிங்கள மொழி கற்கின்ற சுமார் 220 மாணவர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டதுடன் ஒரு வருட கால சிங்கள மற்றும் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் சபையின் பொதுச் செயலாளரும் சிங்கள பாட ஆசிரியருமான H.M. அன்வர் அவர்களும் கிழக்கு மாகாண கட்டளை தளபதி Major General S A Kulathunge RWP RSP VSV USP psc The Commander Security Forces – East அவர்களினால் கெளரவிக்க பட்டார்.
பிரதம அதிதியின் உரையின் போது தமிழ் பேசுகின்ற மாணவர்கள் சிங்களம் கற்பதைப் போன்று எதிர்காலத்தில் சிங்கள மொழி பேசுகின்ற மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் கற்க கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
, மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.