ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் மீன்கள் இறப்பு : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை !

ஆனைவிழுந்தான்  சதுப்பு நிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் மற்றும் அதன் நீர்நிலைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் கடந்த சில நாட்களாக இறந்து வருவதால் அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமான அனவிலுந்தாவ பறவைகள் சரணாலயத்தில் இந்த பருவத்தில் புலம்பெயர் பறவை கூட்டங்கள் சுதந்திரமாக வாழ்ந்துவருவது வழக்கம். எனினும் அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கொட்டப்படும் இரசாயனக் கழிவுகளால் பறவைகள் மற்றும் மீன்கள் இவ்வாறு உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

இறந்த மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகளை பேராதனை சிறப்பு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு ஆய்வக சோதனைகளுக்கு அனுப்பி மரணத்திற்கான காரணத்தை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதகவும் ஆய்வக பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் வன பாதுகாவலர் டபிள்யூ.எல். உபநந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாசிகளை அகற்றாததன் காரணமாக நீர்நிலைகள் மாசுபட்டுள்ளதாகவும், இதன் விளைவாக மீன்கள் மற்றும் பறவைகள் உயிரிழப்பதாகவும் நீர்வள வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

, ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் மீன்கள் இறப்பு : சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை !

Back to top button