பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை !
பலத்த காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
இன்று (26) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (27) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள் மற்றும் வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஊடாக தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, மேற்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையில் 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
, பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை !